Tuesday, August 23, 2011

இன்றைய சிந்தனை - தினமலர் வாரமலர் 21 -08 -2011

நம்பிக்கை உடையோர் கடைசி வரை செல்வர் . மிக இருண்ட நாட்களிலும் வழிகாட்டியாக இருக்கக் கூடியது நம்பிக்கையே ! - ஸ்ரீ அன்னை 

இந்த நிமிடத்தை முறையாக பயன்படுத்தும் போது, இன்றைய நாளை முறையாக பயன்படுத்திக்  கொள்கிறோம் - வால்டேர் 

உழைப்பு மூன்று பெரும் தீமைகளை நம்மிடமிருந்து நீக்குகிறது; அது தொந்தரவு , தீய ஒழுக்கம் , தரித்திரம் - வால்டேர் 

தடைகள் ஏற்படும் போதெல்லாம் , துணிவு இருந்தால் செயல் பட முடியும். - டால்ஸ்டாய்.

பெரிய மனிதன் தன்னுடைய பெருந்தன்மையை , சிறிய மனிதர்களை நடத்துவதன் மூலமே காண்பிக்கிறான். - வால்டேர்  

உங்களுடைய முயறிசிகளுக்கு நீங்கள் எந்த விதமான எல்லையையும் ஏற்படுத்திக் கொள்ளாமல் இருந்தால், உங்களால் மிகப்பெரிய  காரியங்களைச் சாதிக்க முடியும் - நியூமேன்.

நம்பிக்கையும் . அன்பும் ஆன்மாவின் தாய்ப்பால் ; இவ்விரண்டையும் பெறாவிட்டால், ஆற்றல் முழுவதும் அழிந்து போகும்.- ரஸ்கின் 

No comments:

Post a Comment