Tuesday, August 23, 2011

இன்றைய சிந்தனை - தினமலர் வாரமலர் 21 -08 -2011

நம்பிக்கை உடையோர் கடைசி வரை செல்வர் . மிக இருண்ட நாட்களிலும் வழிகாட்டியாக இருக்கக் கூடியது நம்பிக்கையே ! - ஸ்ரீ அன்னை 

இந்த நிமிடத்தை முறையாக பயன்படுத்தும் போது, இன்றைய நாளை முறையாக பயன்படுத்திக்  கொள்கிறோம் - வால்டேர் 

உழைப்பு மூன்று பெரும் தீமைகளை நம்மிடமிருந்து நீக்குகிறது; அது தொந்தரவு , தீய ஒழுக்கம் , தரித்திரம் - வால்டேர் 

தடைகள் ஏற்படும் போதெல்லாம் , துணிவு இருந்தால் செயல் பட முடியும். - டால்ஸ்டாய்.

பெரிய மனிதன் தன்னுடைய பெருந்தன்மையை , சிறிய மனிதர்களை நடத்துவதன் மூலமே காண்பிக்கிறான். - வால்டேர்  

உங்களுடைய முயறிசிகளுக்கு நீங்கள் எந்த விதமான எல்லையையும் ஏற்படுத்திக் கொள்ளாமல் இருந்தால், உங்களால் மிகப்பெரிய  காரியங்களைச் சாதிக்க முடியும் - நியூமேன்.

நம்பிக்கையும் . அன்பும் ஆன்மாவின் தாய்ப்பால் ; இவ்விரண்டையும் பெறாவிட்டால், ஆற்றல் முழுவதும் அழிந்து போகும்.- ரஸ்கின் 

Saturday, August 20, 2011

இன்றைய சிந்தனைகள் - தினமலர் ஆன்மிக மலர் 20-08 -2011

  • சூர்ய உதயத்திற்கு முன் எழுபவர் வாழ்கை பிரகாசமாக இருக்கும் - ஔவையார் 

  • புத்துணர்வு பெற வாரம் ஒருமுறை கோவிலுக்கு செல்வோம் - வாரியார் 

  • வாழும் காலத்திலேயே நல்லதை செய்து விடுங்கள் - திருவள்ளுவர் 

  • தூய உணவு உண்டால் தூய குணம் வளரும் - வாரியார் 

  • எல்லா தானத்திலும் ஞான தானமே உயர்ந்தது - வாரியார் 

  • அயர்ச்சி இல்லாத முயற்சி ஒருவனுக்கு உயர்ச்சி தரும் - வாரியார் 

  • பிறருக்கு  நன்மை செய்தால் அதன் பயன் நமக்கு திரும்ப வரும் - வாரியார் 

  • இரக்கம் காட்டாதவனுக்கு அல்லா இரக்கம் காட்டமாட்டான் - நபிகள் நாயகம்

  • எந்த நேரத்திலுமே மகிழ்ச்சிகரமாய் இருங்கள் - பைபிள் 

  • பிறருடைய குற்றம் குறைகளை ஆராய்தல் கூடாது -வாரியார் 

  • யாருடைய மனமும் நோகும் அளவு பேசுவது கூடாது - வாரியார் 

  • தியானம் என்னும் அணிகலனால் மனதை அழகுபடுத்துங்கள் - வாரியார் 

  • எனக்கு எல்லாம் தெரியும் என்ற அகந்தையை கைவிடுங்கள் - வாரியார்

  • இறைவனிடம் நல்லறிவு வேண்டி தினமும் வழிபடுங்கள் - வாரியார் 

  • பயிருக்கு முள்வேலி போல செல்வத்திற்கு தர்மம் வேலி - வாரியார்
 
-நன்றி - தினமலர் ஆன்மிக மலர் 20-08 -2011  

 

Friday, August 5, 2011

இந்த கணத்தை நான் மகிழ்ச்சியுடைய தாக்கினால்



ஓம் சாந்தி
இன்றைய சிந்தனைக்கு ...
இந்த கணத்தை நான் மகிழ்ச்சியுடைய தாக்கினால் , அடுத்த கணத்தையும் சந்தொஷமாக்கிக் கொள்ளும் வாய்ப்புகளை அதிகரிக்கும்.  



பௌதீக அழகு


ஓம் சாந்தி
இன்றைய சிந்தனைக்கு ...
பௌதீக அழகு, வயது முதிர்ச்சியால் அல்லது விபத்தினால் மறைந்துவிடும்.
ஆத்மீக அழகு அழிக்க முடியாதது.



அறிவிலி


ஓம் சாந்தி
இன்றைய சிந்தனைக்கு ...
அறிவிலி பிறர் தன்னைப் புகழ வேண்டும் என எண்ணுவான்.
அறிவாளியோ பிறரது பண்புகளைக் கண்டு அகமகிழ்வான்.



உண்மையான இதயத்துடனும் இருப்பவன்


ஓம் சாந்தி
இன்றைய சிந்தனைக்கு ...
நேர்மையுடனும் உண்மையான இதயத்துடனும் இருப்பவன் லேசாகவும்,
மன அழுத்தமின்றியும் இருப்பதை எப்போதும் உணர்வான்.



உங்களுடைய மனம் பந்தனங்களிலும்


ஓம் சாந்தி
இன்றைய சிந்தனைக்கு ...
உங்களுடைய மனம் பந்தனங்களிலும் கடந்த காலப் பிரச்சனைகளிலும் அகப்பட்டிருந்தால்
உங்களால் தற்போதைய சந்தோஷத்தை அனுபவும் செய்ய முடியாது.



நீங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமெனில்


ஓம் சாந்தி
இன்றைய சிந்தனைக்கு ...
நீங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமெனில்,
உங்கள் தேவைகள் அதிகரிக்காமல் இருப்பதை உறுதிப் படுத்தி கொள்ளுங்கள்.



உங்கள் கஷ்டங்களை மறப்பதற்கு


ஓம் சாந்தி
இன்றைய சிந்தனைக்கு ...
உங்கள் கஷ்டங்களை மறப்பதற்கு இறைவனை நினைவு செய்யுங்கள்.



நீங்கள் விரும்பியது கிடைக்கவில்லையெனில்!


ஓம் சாந்தி
இன்றைய சிந்தனைக்கு ...
நீங்கள் விரும்பியது கிடைக்கவில்லையெனில் - அது உங்களுக்குத் தேவையற்றதாக இருக்கக்கூடும்.



எல்லாவித சூழ்நிலைகளிலும் ....


ஓம் சாந்தி
இன்றைய சிந்தனைக்கு ...
 எல்லாவித சூழ்நிலைகளிலும் உங்கள் மனம் சீதளமாக இருக்கும்படி சீரமைக்கவும்.



நீண்ட கால பயணத்தில் லெகுவாக வெளியேறும் வழி


ஓம் சாந்தி
இன்றைய சிந்தனைக்கு ...
நீண்ட கால பயணத்தில் லெகுவாக வெளியேறும் வழியைக் காண்பது மிகவும் சிரமமான காரியமாகும்.



எதிர்காலமாக இருந்தது இப்போது நிகழ்காலமாகி விட்டது

ஓம் சாந்தி
இன்றைய சிந்தனைக்கு ...

எதிர்காலமாக இருந்தது இப்போது நிகழ்காலமாகி விட்டது .
இதுவும் கடந்த காலமாக ஆகிவிடும். ஆகவே ஏன் கவலை?




மௌனம் மனதிற்கு ஓய்வளிக்கின்றது

ஓம் சாந்தி
இன்றைய சிந்தனைக்கு ...
மௌனம் மனதிற்கு ஓய்வளிக்கின்றது .
இதன் பொருள் உடலுக்கு ஓய்வளிப்பதாகும்.

சில வேளைகளில் ஓய்வு மட்டுமே தேவையான மருந்தாகும்.




Thursday, July 28, 2011

உங்கள் சொந்த இயல்பை தவிர வேறு எவரும் உங்களை சித்திரவதை செய்வதில்லை

ஓம் சாந்தி
இன்றைய சிந்தனைக்கு ...
 
 
உங்கள் சொந்த இயல்பை தவிர வேறு எவரும் உங்களை சித்திரவதை செய்வதில்லை.
 
ஆகவே உங்கள் இயல்பை இனிமையாகவும் மாற்றி எல்லோரது அன்பிற்கும் பாத்திரமாகி விடுங்கள்.

Wednesday, July 27, 2011

வெற்றி சாந்தமான மனதிலிருந்தே ஊற்று எடுக்கிறது

 
ஓம் சாந்தி
 
இன்றைய சிந்தனைக்கு ...
 
 
வெற்றி சாந்தமான மனதிலிருந்தே ஊற்று எடுக்கிறது. குளிர்ந்த இரும்பே, சூடான இரும்பை வெட்டவும் வளைக்கவும் செய்கிறது. 




சாந்தமும் , சகிப்புத்தன்மையும்

 
ஓம் சாந்தி
 
இன்றைய சிந்தனைக்கு ...
 
 
சாந்தமும் , சகிப்புத்தன்மையும் ஒரு அறையின் குளிர் சாதனம் போல் செயற்படுகின்றன.
அவை மனிதனின் செயல் திறனை அதிகரிக்கச் செய்கின்றன.
 


Monday, July 25, 2011

நீங்கள் மிகவும் விசேஷமானவர்கள்

ஓம் சாந்தி
இன்றைய சிந்தனைக்கு ...
நீங்கள் மிகவும் விசேஷமானவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் பாகத்தை வேறு எவராலும் உங்களைவிடத் திறமையாகச் செய்ய முடியாது.




Sunday, July 24, 2011

உண்மையான வெற்றி

ஓம் சாந்தி
இன்றைய சிந்தனைக்கு ...
உண்மையான வெற்றி என்பது புலன்களில் மீதுள்ள பூரணக் கட்டுப்பாடாகும்.


Saturday, July 23, 2011

கஷ்டமான சூழ்நிலையை


ஓம் சாந்தி
இன்றைய சிந்தனைக்கு ...
கஷ்டமான சூழ்நிலையை மகிழ்ச்சியுடனும் புன்முறுவலுடனும் எதிர்கொள்ளும் மனிதன் மகானாக மதிக்கப்படுகிறான்.



துக்கம் நிறைந்த இந்த உலகத்தில்


ஓம் சாந்தி
இன்றைய சிந்தனைக்கு ...
துக்கம் நிறைந்த இந்த உலகத்தில் பெரும் செல்வத்தைக் கொண்டுவருவது - பணமா? அல்லது மகிழ்ச்சி என்னும் குணமா?



நீங்கள் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழியுங்கள்.



ஓம் சாந்தி
இன்றைய சிந்தனைக்கு ...
நீங்கள் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழியுங்கள்.
ஆனால் இவை உள்ளார்ந்த மகிழ்ச்சியின் அனுபவத்தை தந்திருக்கிறதா என சோதியிங்கள்.



சில வேளைகளில்


ஓம் சாந்தி
இன்றைய சிந்தனைக்கு ...
சில வேளைகளில் புன்னகையானது பாலைவனத்தில் ஒரு துளி நீரைப்போன்றது.



உங்களுக்குத் தேவையான ஆயுதங்கள்



ஓம் சாந்தி
இன்றைய சிந்தனைக்கு ...
பலர் உங்களுடன் சண்டைச் சச்சரவில் வர விரும்பலாம், புன்னகையும் அன்பான மனபாங்குமே உங்களுக்குத் தேவையான ஆயுதங்கள் என்பதை உணர்த்து கொள்ளுங்கள்.



எல்லா சூழ்நிலைகளிலும்



ஓம் சாந்தி
இன்றைய சிந்தனைக்கு ...
எல்லா சூழ்நிலைகளிலும் சமநிலையுடன் இருப்பது தான் மகிழ்ச்சிக்குத் திறவுகோல்.



புன்சிரிப்பு


ஓம் சாந்தி
இன்றைய சிந்தனைக்கு ...
புன்சிரிப்பு உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவது மட்டும்மல்லாது மற்றவர்கள் வாழ்கையிலும் ஒளியை கொண்டுவரும்.


நல்ல முயற்சிகள் மகிழ்ச்சியை தரும்


ஓம் சாந்தி
இன்றைய சிந்தனைக்கு ...
நல்ல முயற்சிகள் மகிழ்ச்சியை தரும்.
அந்த முயற்சிகள் பலன் தரும்போது மகிழ்ச்சி மேலும் அதிகமாகும்.



வாழ்க்கை என்பது ஒரு நாடகம்.



ஓம் சாந்தி
இன்றைய சிந்தனைக்கு ...
வாழ்க்கை என்பது ஒரு நாடகம்.
இதன் உட்பொருளைப் புரிந்து கொண்டால் பெரும் மகிழ்ச்சி இருக்கும்.



முகத்திற்கு அழகு இன்முகம் .

ஓம் சாந்தி
இன்றைய சிந்தனைக்கு ...
முகத்திற்கு அழகு இன்முகம் .
வருத்தமுடயவர் உண்மையில், அழகுடையவர் அல்லர்.


இன்றைய நாளையையும் இழந்து விடாதீர்கள்



ஓம் சாந்தி
இன்றைய சிந்தனைக்கு ...
சில தவறுகளினால் நேற்றைய பொழுது துன்பத்தில் கழிந்தது எனில் அதையே நினைத்து இன்றைய நாளையையும் இழந்து விடாதீர்கள்.



ஒவ்வொரு அடியும் இறைவனின் நினைவில்



ஓம் சாந்தி
இன்றைய சிந்தனைக்கு ...
ஒவ்வொரு அடியும் இறைவனின் நினைவில் எடுத்து வைத்தால்,
ஒவ்வொரு கணத்திலும் எவ்வளவு அதிர்ஷ்டம் என்று கற்பனை செய்து பாருங்கள்.



திருப்தியும் பேரானந்தமும்



ஓம் சாந்தி
இன்றைய சிந்தனைக்கு ...
திருப்தியும் பேரானந்தமும் ஒன்றோடு ஒன்று கைகோர்த்துச் செல்லும்.
இக்குணங்களால் நீங்கள் வசீகரிக்கபடுவீர்கள்.



பேரானந்த வாழ்வுக்கு



ஓம் சாந்தி
இன்றைய சிந்தனைக்கு ...
பேரானந்த வாழ்வுக்கு உண்மையான அஸ்திவாரம் சமநிலை, இதை எப்போதும் மனதில் வைத்திருப்பின் உங்களது நிகழ் காலமும், எதிர் காலமும் எப்போதும் பிரகாசமாக இருக்கும்.



சோம்பல் பெரும் விகரமாகும்.



ஓம் சாந்தி
இன்றைய சிந்தனைக்கு ...
மிகவும் சந்தோஷமாக இருபவர்களுக்கு உள்ளார்ந்த சோம்பல் இருக்காது.
சோம்பல் பெரும் விகரமாகும்.



Friday, July 22, 2011

வீணான வேலைகள்



ஓம் சாந்தி
இன்றைய சிந்தனைக்கு ...
வீணான வேலைகள் உங்களை சுமையாக்கி களைப்படையச் செய்துவிடும். உடன்பாடான வேலைகள் உங்களை மகிழ்ச்சியாகவும், லேசாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கச் செய்யும்.



கடந்த காலத்தை மறக்கும் சக்தி

ஓம் சாந்தி
இன்றைய சிந்தனைக்கு ...
வாழ்வின் இனிமையை சுவைப்பதற்கு உங்களிடம் கடந்த காலத்தை மறக்கும் சக்தி இருக்க வேண்டும்.


உங்கள் முன்னேற்றத்தில்



ஓம் சாந்தி
இன்றைய சிந்தனைக்கு ...
உங்கள் முன்னேற்றத்தில் அதிக நேரம் செலவிடுங்கள். அப்போது மற்றவரை விமர்சிக்க நேரம் இருக்காது.



கஷ்டமான வேலை



ஓம் சாந்தி
இன்றைய சிந்தனைக்கு ...
எந்த ஒரு கஷ்டமான வேலையையும் ஒரு புன்னகை எளிதாக்கிவிடும்.



இன்முகம் உடையவர்



ஓம் சாந்தி
இன்றைய சிந்தனைக்கு ...
இன்முகம் உடையவர் உற்சாகத்தோடு இருப்பதோடு மற்றவர்களின் உதடுகளிலும் புன்னகை தவழச் செய்கின்றார்.



Thursday, July 21, 2011

மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்பது


ஓம் சாந்தி
இன்றைய சிந்தனைக்கு ...
 மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்பது ஒரு பெரிய தானத்திற்கு ஒப்பான செயலாகும் .



சுதந்திரம் என்பது

ஓம் சாந்தி
இன்றைய சிந்தனைக்கு ...
சுதந்திரம் என்பது மனதில் உதயமாகின்றது -
கயிறுகளை துண்டிப்பதால் அல்ல


திருப்தி உள்ளவர்

ஓம் சாந்தி
இன்றைய சிந்தனைக்கு ...
திருப்தி உள்ளவர் வங்கியில் சிறிய கணக்கொன்றை வைத்திருப்பினும் பெரும் செல்வம் உடையவராய் உணர்வார்.